சீன அரசுத் தலைவரின் மனைவி பெங் லீயுவான் அம்மையார், 17ஆம் நாள் பிற்பகல், சீனத் தேசிய வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு ‘குலியாங் பிணைப்பு’ என்னும் சீன-அமெரிக்க இளைஞர்களுக்கான பரிமாற்ற நடவடிக்கையில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
பங் லீயுவான் அம்மையார் கூறுகையில், நூறு ஆண்டுகள் கடந்த குலியாங் கதை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அமெரிக்க ஐயோவா மாநிலத்தின் பழைய நண்பருடனான 40 ஆண்டுகால ஆழமான நட்புறவு ஆகியவை சீன-அமெரிக்க மக்களின் நட்புறவுக்கான முன்மாதிரியாக திகழ்வதைச் சுட்டிக் காட்டினார்.
மேலும், இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் எனக் குறிப்பிட்ட அவர், இரு நாட்டின் நட்புறவை வெளிகொணர்ந்து, அமைதியை விரைவுபடுத்தி, சீன-அமெரிக்க நட்புறவுப் பாலத்தை உருவாக்கி, இரு நாடுகளின் அருமையான எதிர்காலத்திற்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார்.