இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் அந்நிய செலாவணியில் நிதானமான அதிகரிப்பு

2026ஆம் ஆண்டின் முற்பாதியில்  சீன சர்வதேச வரவு செலவு பற்றிய அறிக்கையை சீன தேசிய அந்நிய செலாவணிப் பணியகம் அண்மையில் வெளியிட்டது. இதில், சீனாவின் அந்நிய செலாவணி சந்தையின் பரிவர்தனை அளவு நிதானமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு ரென்மின்பி அந்நிய செலாவணிச் சந்தைப் பரிமாற்றத் தொகை மொத்தம் 22.1 இலட்சம் கோடி அமெரிக்க டாலராகும். கடந்த ஆண்டை விட இது 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

திறந்த மற்றும் பல்வேறு முக்கிய அமைப்புகள் இச்சந்தையில் பங்கெடுக்கின்றன. ஜூன் மாதம் வரை, வங்கிகளுக்கிடையில் அந்நிய செலாவணிச் சந்தையில் பங்கெடுத்த அமைப்புகளின் எண்ணிக்கை 829ஐ எட்டியுள்ளது. இதில் 172 வெளிநாட்டு அமைப்புகள் இடம் பெறுகின்றன.

You May Also Like

More From Author