6ஆவது சீன-ரஷிய ஊடக மன்றக் கூட்டம் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷுலெய் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் ரஷியா பொருளாதார சமூகத்தின் வளர்ச்சி நெடுநோக்குடன் இணைவது உள்ளிட்ட முக்கிய கருப்பொருட்களில் இரு நாடுகளின் ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
பல்வேறு துறைகளின் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புச் சாதனைகளை ஆழமாக செய்தி வெளியிட வேண்டும். சீன-ரஷிய நாகரிகத் தொடர்பு மற்றும் கூட்டு பகிர்வை விரைவுபடுத்தி, எண்ணியல் மயமாக்கம் மற்றும் நுண்ணறிவு மயமாக்க மாற்றத்தின் அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, ஊடகங்களின் பரவல் மற்றும் செல்வாக்கு ஆற்றலைக் கூட்டாக வலுப்படுத்த வேண்டும் என்று இதில் கலந்துகொண்டோர் கருத்து தெரிவித்தனர்.
