ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை காங்கிரஸ் உயர்த்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லமில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, அரசியல் சாசனத்தைக் காப்பாற்றவே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்றார்.
“பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அரசியல் சாசனத்தை முறியடிக்க விரும்புகின்றன.
அதை மாற்ற வேண்டும். காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன. இந்த அரசியலமைப்பு நமக்கு ஜல்(நீர்), ஜங்கல்(காடு), ஜமீன்(நிலம்) ஆகிய உரிமைகளை வழங்கியுள்ளது. நரேந்திர மோடி அவற்றை அகற்ற விரும்புகிறார். அவருக்கு முழு அதிகாரம் வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.