1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள், அமெரிக்காவின் பேர்ள் துறைமுகம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தி 1100கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் அரிசோனா போர் கப்பலுடன் கடல் நீரில் முழ்கியுள்ளனர். இக்கப்பல் இன்றும் கூட, எண்ணெய் கசிந்ததால், கடலில் மிதந்த கறுப்பு எண்ணெய் துளி கறுப்புக் கண்ணீர் என அழைக்கட்டுள்ளது. ஜப்பானிய ராணுவவாதத்தின் கொடூரத்தை இது மக்களுக்கு நினைவூட்டுகின்றது.
2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைப் பாதித்து, ராணுவவாதத்தை மீட்டெடுக்கும் ஜப்பானிய தரப்பின் புதிய ஆத்திரமூட்டல் செயல்களை எதிர்கொண்டு, எந்த ஒரு நாடும் அதன் பாதிப்பிலிருந்து தப்பி செல்ல முடியாது என்றும், ராணுவவாதத்தை மீட்டெடுக்க முயலும் எந்த செயலையும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் கைகோர்த்து கொண்டு கூட்டாக தடுக்க வேண்டும் என்றும் கருத்து கணிப்பில் பங்கேற்ற 89.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். நிறுவனம் உலகின் இணையப் பயனர்கள் மீது இக்கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.
பேர்ள் துறைமுக தாக்குதல் சம்பவம் மீண்டும் ஏற்படுமென 78.1விழுக்காட்டினர் கவலைத் தெரிவித்தனர். மேலும், அண்மையில் 2ஆம் உலக போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைப் பாதிக்கும் செயலையும் கூற்றுகளையும் ஜப்பானிய தலைமை அமைச்சர் திருப்பிப் பெற வேண்டுமென உலக பாசிச எதிர்ப்புப் போருக்கான கூட்டணி நாடான அமெரிக்கா தெளிவாக கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் 73விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்தனர்.
