ரஷ்யாவிடம் டீசல் : அம்பலமான வல்லரசு நாட்டின் இரட்டை வேடம்….!! 

Estimated read time 0 min read

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சித்து வந்த அமெரிக்கா, தற்போது தனது சொந்தத் தேவைக்காக ரஷ்யாவிடமே டீசல் வாங்கும் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்வதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, ரஷ்ய எரிசக்தியை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிக்கும் புதிய சட்டத்தையும் கொண்டுவந்தது.

ஆனால், மேற்கு ஆசியப் போரால் அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாலும், வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலைச் சமாளிக்கவும் டிரம்ப் அரசு திடீரென ரஷ்யாவுடன் இந்த டீசல் ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

மற்ற நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்கினால் குற்றம் சொல்லும் அமெரிக்கா, தன் நாட்டின் பொருளாதாரத் தேவை என்று வரும்போது மட்டும் விதிகளை மாற்றுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த இரட்டை நிலைப்பாடு, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான முடிவுகளை நியாயப்படுத்தவும், தடைகளிலிருந்து விலக்கு கோரவும் ஒரு வலுவான வாய்ப்பை வழங்கியுள்ளது.

You May Also Like

More From Author