சீன-ஆசிய வளர்ச்சி வங்கி ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு மேம்பாடு

சீன-ஆசிய வளர்ச்சி வங்கி ஒத்துழைப்பு நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம் மற்றும்  உயர் நிலைக் கருத்தரங்கு நவம்பர் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் இரு தரப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்குவது போன்றவை விவாதிக்கப்பட்டுள்ளன. சீன நிதி அமைச்சர் லான் ஃபோ ஆன் இதில் உரை நிகழ்த்துகையில், சீனா–ஆசிய வளர்ச்சி வங்கியின் ஒத்துழைப்புகள் சீன வளர்ச்சியின் தேவைகளை ஏற்று, பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் கோட்பாட்டைப் பின்பற்றி, திறப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எழுச்சியை மேற்கொண்டு வருவதுடன், மேலும் ஆழமாகவும் சீராகவும் வளர்ந்து, முக்கிய சாதனைகளைப் பெற்று வருகின்றன என்றார். மேலும், இரு தரப்புகளுக்கிடையில் ஒத்துழைப்பு நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, இரு தரப்புகளின் ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை ஆழமாக்க இரு தரப்பும் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author