28வது சீனா சர்வதேச உயர் தொழில்நுட்ப சாதனைகள் கண்காட்சி நவம்பர் 26ஆம் நாள் ஷென்சென் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் தொடங்கியது. “புத்தாக்கம் மாற்றத்திற்கு வழிவகுத்தல், ஒத்துழைப்பு உலகை இணைத்தல்” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த கண்காட்சியில் 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் அமைப்புகளும் பங்கேற்றுள்ளன. மூன்று நாட்கள் நீடிக்கும் இக்கண்காட்சி, சுமார் 5இலட்சம் தொழில்முறை சார் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கண்காட்சியில், முக்கிய உபகரணங்கள், டேக் ஜயெனட் (tech giant) சங்கிலிகள், கணினி ஆற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனிதர் உள்ளிட்ட 22 கண்காட்சிப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சீன உயர் தொழில்நுட்ப மன்றம், 2026ஆம் ஆண்டு ஷென்சென் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டு மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளும் இதில் அடங்கும். தவிர, ரஷியா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கெடுத்துள்ளன.
