சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் நவம்பர் 26ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங்கில், ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர் ஷினோபு காண்டாவைச் சந்தித்துரையாடினார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சர்வதேச அளவில் பதற்ற காரணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனைச் சரிசெய்ய பல தரப்புகளும் பிராந்திய ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஆசிய வளர்ச்சி வங்கி, நீண்டகாலப் போக்கில் பிராந்திய பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை விரைவுபடுத்தும் முக்கிய அமைப்பாகும். இவ்வங்கியின் தொடர்புடைய பணிகளுக்குச் சீனா தொடர்ந்து ஆதரளிக்கும் என்றார். மேலும், இரு தரப்புகளுக்கிடையில் ஒத்துழைப்பு நிலையை தொடர்ந்து மேம்படுத்தி, பிராந்திய வளர்ச்சி மற்றும் செழுமையை விரைவுபடுத்த சீனா பாடுபடும் என்றும் அவர் கூறினார்.
ஷினோபு காண்டா கூறுகையில், தற்போதைய உலகப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையை எதிர்நோக்கும் போது, சீனப் பொருளாதாரம் மீள் தன்மையுடன் அதிகரித்து வருவதற்கு இவ்வங்கி வாழ்த்து தெரிவிக்கிறது எனக் குறிப்பிட்டார். அதோடு, சீனாவுடனான ஒத்துழைப்புக் கூட்டாளிறவை மேலும் உயர் நிலைக்குத் தூண்ட இவ்வங்கி பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
