பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த சகோதரருமான நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்(PoK) பிரதமராக விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் ராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக PoK பகுதியில் மக்கள் வீதியில் இறங்கி போராடி வரும் சூழ்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
PoK தலைநகரான முசாஃபராபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப்,”காஷ்மீர் எனது இரண்டாவது வீடு. எனது முன்னோர்கள் காஷ்மீரிலிருந்தே இடம்பெயர்ந்தவர்கள். வரவிருக்கும் தேர்தலில் எனது கட்சியான PML-N வெற்றி பெற்றால், இந்த பகுதியின் வளர்ச்சியை நேரில் மேற்பார்வையிட என்னை PoK பிரதமராக்குமாறு எனது சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் கேட்பேன்”என்று பேசியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் ஆக ஆசை: நவாஸ் ஷெரீப் விருப்பம்
