உற்பத்தியில் அதிகப்படியான உற்பத்தித் திறன் தொடர்பாக, சீனா உள்ளிட்ட 14 பொருளாதாரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 301 வர்த்தக விசாரணையின் முடிவுக்கு இணங்க, புதிய வரி விதிப்பதாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் அண்மையில் முன்மொழிந்துள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹெ யாடொங் 26ஆம் நாள் கூறுகையில்,
அமெரிக்காவின் 301 வர்த்தக விசாரணை, வழக்கமான ஒருதரப்புவாத செயலாகும். இது, சர்வதேசப் பொருளாதார ஒழுங்கை கடுமையாக சீர்குலைப்பதோடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறுகின்றது. சீனா இதனை உறுதியுடன் எதிர்க்கின்றது என்று தெரிவித்தார்.
சீனா தொடர்புடைய நிலைமையில் உன்னிப்பாக கவனம் செலுத்துவதோடு, தனது நியாயமான உரிமைகளையும் நலன்களையும் உறுதியாகப் பாதுகாப்பதற்காக, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
