ரஷிய அரசுத் தலைவரின் உதவியாளருடன் வாங்யீ சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் மத்திய வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங்யீ, 12ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், ரஷிய அரசுத் தலைவரின் உதவியாளரும் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருமான பாத்ருசேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசு தலைவர் புதின் அவர்களுக்கான அன்பு வாழ்த்துக்களை வாங்யீ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் தொடர்ந்து நெருக்கமாக தொடர்புகொண்டு, இரு நாட்டுறவு மேலும் உயர்தரமாகவும், உயர் நிலையாகவும் வளர்வதற்கு வழிநடத்துகின்றனர். உலகளாவிய கடல் சார் நிர்வாகத்திற்கு சீனா மற்றும் ரஷியா முக்கிய பங்காற்றி, கடல் சார் பொது சமூகக் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author