மகளிர் இலட்சியத்தின்
வளர்ச்சியை சர்வதேச சமூகம் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று மகளிர், அமைதி மற்றும் பாதுகாப்புக்கான ஐ,நாவின் பொது விவாதக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி ஃபு சுங் 6ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் கூறுகையில், இவ்வாண்டு உலக மகளிர் மாநாடு நடத்தப்பட்டதன் 30ஆவது ஆண்டு நிறைவாகும். மகளிர், அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினை பற்றிய ஐ.நாவின் 1325ஆவது
தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 25ஆவது ஆண்டு
நிறைவுமாகும். தற்போது சர்வதேச சூழ்நிலை பதற்றமானது. மகளிரின் மீதான வன்முறை மற்றும் பாகுபாடு, பொருளாதாரத்தின் சமமின்மை முதலியவை இன்னும் நிலவுகின்றன. மகளிரின் உரிமை நலனைப் பாதுகாத்து, மகளிர் இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னெடுக்க சர்வதேச சமூகம்
ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டாக முயற்சி
மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். சர்ச்சையைத் தடுத்து, தணிவுபடுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவது, மகளிர் உரிமைகள் மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கு
ஆதரவளிப்பது, மகளிர் துறைகளிலான பரிமாற்றம் மற்றும்
ஒத்துழைப்பை முன்னேற்றுவது ஆகிய மூன்று முன்மொழிவுகளை அவர் முன்வைத்தார்.