சீனா தனது சமீபத்திய அதிவேக maglev (magnetic levitation) ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மணிக்கு 600 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
இந்த எதிர்கால போக்குவரத்து வாகனம் கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடந்த 17வது நவீன ரயில்வே கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன் (CRRC) உருவாக்கிய இந்த ரயிலின் காற்றியக்கவியல் வடிவமைப்பு மென்மையான மற்றும் வேகமான பயணத்திற்கு காற்று எதிர்ப்பைக் குறைக்கிறது.