எப்ஏஓ அமைப்பின் 100 பெண் ஹீரோக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட இரண்டு சீனப் பெண்கள்

வேளாண்-உணவு அமைப்புமுறை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான 100 பெண் ஹீரோக்கள் என்ற முன்னெடுப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 99 பெண்களின் பட்டியலை, ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. சீனாவின் ஹுபேய் மாகாணத்தைச் சேர்ந்த மோக்ஸிபஸ்சன் எனும் பாரம்பரிய சிகிச்சை நிபுணர் யூ ஜின்சியுவும், ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஃபெங்ருய் விவசாய இயந்திரக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டோங் மின்ஃபாங்கும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சீன தேசிய அளவிலான பொருள்சாரா கலாச்சார பாரம்பரியமான ச்சிசுன் மோக்ஸிபஸ்சன் சிகிச்சையின் முன்னணி நிபுணரான யூ ஜின்சியு, கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பைப் பெறவும்,  தொழில்களைத் தொடங்கவும் உதவியுள்ளார்.

கூட்டுறவு சங்கத்துக்கு தலைமை தாங்கி தானிய உற்பத்தியில் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்து வரும் டோங் மின்ஃபாங், தொழிற்நுட்பத் திறன் பயிற்சி பெறுவதற்கும், தொழில்களைத் தொடங்குவதற்கும் ஆதரவளிப்பதன் மூலம், கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதார வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author