சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீனத் துணை தலைமை அமைச்சருமான ஹெ லீஃபாங் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க-சீன வர்த்தக கவுன்சிலின் பிரதிநிதிக் குழுவைச் சந்தித்துரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், சீன-அமெரிக்க உறவு தற்போதைய உலகில் மிக முக்கியமான இரு தரப்புறவுகளில் ஒன்றாகும். சீன-அமெரிக்க நட்புப் பரிமாற்றம், பொருளாதார மற்றும் வர்த்தக உறவு ஆகிவற்றின் நிதானமான சுமுகமான வளர்ச்சியை முன்னேற்றுவதில் அமெரிக்க-சீன வர்த்தக கவுன்சில் தொடர்ந்து பாலமாகப் பங்காற்ற விரும்புவதாகக் கூறினார்.
மேலும், அமெரிக்க தொழில் நிறுவனங்கள் சீன வளர்ச்சி வாய்ப்புகளையும் சீன சந்தையின் உள்ளார்ந்த ஆற்றலையும் சீராகப் பயன்படுத்தி இரு நாட்டு பொருளாதார வர்த்தக உறவுக்கு மேலதிக உறுதித் தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
