இவ்வாண்டின் டிசம்பர் 20ஆம் நாள், மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்த 25ஆவது ஆண்டு நிறைவாகும்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளில், மக்கௌ தனிச்சிறப்புடைய “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் நடைமுறையாக்கம் பெரும் சாதனைகளைப் பெற்று, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் மக்கௌ அடிப்படை சட்டம் உறுதிப்படுத்திய சட்டம் ஒழுங்கு வலுவடைந்துள்ளது.
மேலும், பொருளாதாரம் உயர்வேகமாக வளர்ச்சியடைந்து, மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு, சமூகம் நிதானமாக உள்ளது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது,
மத்திய அரசின் ஆதரவுடன், வெளிநாடுகளுடன் பரிமாற்றம் மற்றும் தொடர்பை மக்கௌ ஆக்கமுடன் மேற்கொண்டு வருகிறது. இதுவரை, 190க்கும் மேலான சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் மக்கௌ சேர்ந்துள்ளது.
120க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் நிதானமான பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தொடர்பை மக்கௌ உருவாக்கியுள்ளது.
எதிர்காலத்தில், மத்திய அரசு மற்றும் தாய்நாட்டின் பெருநிலப்பகுதியின் பெரும் ஆதரவுடன், மக்கௌ மேலதிக சாதனைகளைப் பெற்று, பெரிய சர்வதேச நகரம் என்ற புகழ் பெறும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.