15ஆவது ஐந்தாண்டு திட்டக் காலக்கட்டத்தில் ரயில் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக வரைவுத் திட்டத்தை சீன தேசிய ரயில் நிர்வாகப் பணியகம் அண்மையில் வெளியிட்டது. இதில் அடிப்படை ஆராய்ச்சி, முன்னணி தொழில் நுட்பம், பசுமை மற்றும் கார்பன் குறைவு துறைகளின் முக்கிய கடமைகள் குறித்து விளக்கப்பட்டன. மேலும், 2030ஆம் ஆண்டு வரை, ரயில் நவீனமயமாக்க வளர்ச்சிக்கு வழிக்காட்டும் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க அமைப்புமுறை அடிப்படையாக உருவாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, 15ஆவது ஐந்தாண்டு காலக்கட்டத்தில், சுமார் 30 சீன தேசிய ரயில் நிர்வாகப் பணியகத்தைச் சேர்ந்த அறிவியல் புத்தாக்கத் தளங்கள் உருவாக்கப்படும். 100க்கும் மேலான முக்கிய தொழில் நுட்பங்கள் முன்னேற்றமடையும். 500க்கும் மேற்பட்ட முக்கிய அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளும் படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிரவும், ரயில் துறையின் பெரிய மாதிரி, தரவு தொகுப்பு, கணித்தல் திறன் அடிப்படை வசதிகள் போன்றவற்றை சீனா விரைவுபடுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
