சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் சூலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-வியட்நாம் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75-ஆவது ஆண்டு நிறைவின் போது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் சூலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆகஸ்ட் திங்களில், நீங்கள் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டீர்கள்.
இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் உறவு குறித்தும், சோஷலிச லட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவது குறித்தும் நாம் இருவரும், கருத்துகளை ஆழமாக பரிமாறி கொண்டு விரிவான ஒத்த கருத்துகளை எட்டியுள்ளோம். கடந்த அரையாண்டு காலத்தில், இரு கட்சிகளும் இரு நாடுகளின் பல்வேறு வாரியங்களும் நடைமுறைகளை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தியதால், திட்டமிட்ட சில பணிகளில் நாம் சாதனைகளை படைத்துள்ளோம் என்றார். உயர் நிலை வழிகாட்டுதல்கள் மூலம் இரு நாடுகளின் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை முன்னேற்றி, புதிய உயர் தர உற்பத்தி திறனுக்கான ஒத்துழைப்பு தலத்தை உருவாக்கி, எல்லை கடந்த நிதானமான தொழில் மற்றும் விநியோக சங்கிலியை உருவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.