சீன அரசுத்தலைவர் மற்றும் டோகோவின் அமைச்சர்கள் கவுன்சில் தலைவர் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள டோகோவின் அமைச்சர்கள் கவுன்சில் தலைவர் ஃபௌரே எஸோஸிம்னா க்னாஸிங்பேவை, அக்டோபர் 13ஆம் நாள் பிற்பகல் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை புதிய யுகத்தில் சீனா-டோகோ பொது எதிர்கால சமூகத்துக்கு உயர்த்துவதாக இரு தரப்பினரும் அறிவித்தனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் டோகோவுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவானது, இரு நாடுகளின் மூத்த தலைமுறைத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. அதன் அடித்தளம் ஆழமாகவும் நிலையாகவும் உள்ளது என்றும், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு ஒத்துழைப்புக் கோட்பாடுகள் இணக்கமானதாகவும், பரந்த எதிர்கால வாய்ப்புகளைக் கொண்டதாகவும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஃபௌரே எஸோஸிம்னா க்னாஸிங்பே கூறுகையில், இரு நாடுகளுக்கிடையேயான நட்பு தொடர்ந்து வலுவடைந்து, மேலும் ஆழமாகி வருகிறது என்றும், இரு நாட்டுறவை பொது எதிர்கால சமூகம் என்ற நிலைக்கு உயர்த்துவதற்கான உங்கள் முடிவுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நம்பிக்கைக்கு ஏற்ப நாம் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author