வரலாற்றுப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் ஜப்பானியர் சிலர் கபடமான மற்றும் ஆபத்தான தந்திரங்களை மீண்டும் மேற்கொண்டுள்ளனர்.
சர்வதேச அளவில் முக்கியமான பெரிய மாதிரிகளுக்கு 2ஆவது உலகப் போரின் வரலாறு பற்றிய தவறான தரவுகளை ஜப்பானிய வலது சாரிகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் என்று ஊடகங்கள் வெளியிட்டன. வரலாற்றுப் பாடநூலை திரித்துப்புரட்டியது, ஏஐ மூலம் போலியான காணொளிகளைத் தயாரித்தது, தவறான தரவுகளை வழங்கியது ஆகியவற்றின் மூலம், ஜப்பானிய வலது சாரிகள் நாட்டின் ஆக்கிரமிப்பு வரலாற்றை மழுப்ப தந்திரமாக முயன்று வருகின்றனர். அவர்களின் தீய நோக்கங்கள் குறித்து சர்வதேச சமூகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
டோக்கியோ விசாரதணையைத் துவங்கி இவ்வாண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவ்விசாரணையில், ஜப்பானிய இராணுவம் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறியதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் வரலாற்று காரணமாக, ஜப்பானிய இராணுவவாதம் முற்றிலும் தண்டிக்கப்பட்டு ஒழிக்கப்படவில்லை.
நீண்டகாலமாக வரலாற்று திருத்தவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் ஜப்பானிய வலது சாரிகள் டோக்கியோ விசாரணையின் முடிவை வெளிப்படையாக நிராகரித்து, ஆக்கிரமிப்பு குற்றத்திலிருந்து தப்பித்துச் செல்ல முயன்று வருகின்றனர். அவர்களின் இந்தச் செயலில், 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கை சீர்குலைக்கும் ஆபத்தான நோக்கத்தைக் கண்டறிய முடியும். மேலும், போருக்குப் பிந்தைய கட்டுப்பாட்டிலிருந்து விலகி மறு இராணுவமயமாக்கலை நனவாக்குவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவது என்பது ஜப்பானிய அரசின் உள்நோக்கமாகும்.
வரலாற்று உண்மைகள் திருத்தப்பட முடியாதது. ஜப்பானிய வலது சாரிகள் எவ்வித முறையிலும் ஜப்பானிய இராணுவவாதம் உலகிற்கு தீங்கு விளைவித்ததற்கான சான்றுகளை அழிக்க வாய்ப்பில்லை. ஜப்பானிய தரப்பு தொடர்ந்து தவறாகச் செயல்பட்டால், விசாரணைக்கு மீண்டும் அனுப்பப்படுவது உறுதி.
