சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் டாமஸ் பாஹ், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹைசியோங் ஆகியோர் பிப்ரவரி 7ஆம் நாள் 2026ஆம் ஆண்டு மிலானொ கொர்டினா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சர்வதேசப் பொது சமிக்கை தயாரிப்புக்கும் அதிகாரத்தை சிஎம்ஜி குழுவுக்கு வழங்கினர்.
அப்போது பாஹ் கூறுகையில், உலகளாவிய ஒளிபரப்பாளர்கள் மற்றும் செய்தி ஊடக நிறுவனங்களுக்குத் தலைசிறந்த சேவைகளைச் சி.எம்.ஜி வழங்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து சீன ஊடகக் குழுமத்தின் மூலவளங்களையும் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டையும் முழுமையாகப் பயன்படுத்தி, நடைமுறை நடவடிக்கைகளுடன் சீன விளையாட்டு எழுச்சியையும் ஒலிம்பிக் எழுச்சியையும் வெளிக்கொணர்ந்து, மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தை உருவாக்குவதற்குப் பெரிய அளவில் புதுமையாக பங்காற்ற வேண்டும் என்று ஷென்ஹைசியோங் தெரிவித்தார்.
சீன ஊடகக் குழுமத்தின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழுவுக்கு அதிகாரம் வழங்குதல்
