சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள போட்ஸ்வானா அரசுத் தலைவர் டுமா போகோவை அக்டோபர் 13ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் சந்தித்து பேசினார். பின்னர், இரு நாட்டு அரசுத் தலைவர்களும், இரு தரப்புறவை பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவாக உயர்த்த அறிவித்தனர்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், இரு நாடுகளின் ஆளும் கட்சிகள் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, நாட்டின் ஆட்சிமுறை பற்றிய அனுப்பவங்களின் பரிமாற்றத்தை ஆழமாக்க வேண்டும் என்றும், இரு தரப்பும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக் கட்டுக்கோப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், போட்ஸ்வானாவுடன் இணைந்து, எண்ணியல் பொருளாதாரம், வேளாண்மை, கால்நடை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, நுண்ணறிவு வாய்ந்த கல்வி திட்டப்பணியைச் செயல்படுத்தி, போட்ஸ்வானாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குத் துணைப் புரிய சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், சீன-போட்ஸ்வானா மற்றும் சீன-ஆப்பிரிக்க சுரங்கத்தொழில் ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது குறித்து ஷி ச்சின்பிங் நான்கு முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, ஆப்பிரிக்காவின் மூலவளங்கள், ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை என்ற முன்நிபந்தனையில் ஊன்றி நிற்க வேண்டும். இராண்டாவதாக, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புக் கருத்தில் ஊன்றி நிற்க வேண்டும். மூன்றாவதாக, உயர்தர வளர்ச்சி என்ற ஒத்துழைப்பு திசையில் ஊன்றி நிற்க வேண்டும். நான்காவதாக, நியாயமான மற்றும் திறப்பான ஒத்துழைப்பு நிலைமையில் ஊன்றி நிற்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
டுமா போகோ கூறுகையில், சீனாவுடனான உறவுக்கு போட்ஸ்வானா முக்கியத்துவம் அளித்து வருவதோடு, ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்று வருகிறது. மேலதிக சீனத் தொழில் நிறுவனங்கள் போட்ஸ்வானாவில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம் என்றார்.
