சீனத் தேசிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மாநாடு அக்டோபர் 12,13 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இம்மாநாட்டில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், 15வது ஐந்தாண்டுத் திட்டக்காலமானது, 2035ஆம் ஆண்டுக்குள் ஆரோக்கிய சீனா என்ற இலக்கை நனவாக்குவதற்கான முக்கியமான காலமாகும். சீனத் தனிச்சிறப்புடைய சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று, புதிய யுகத்தில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய பணிக் கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய லட்சியத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, பொது மக்களின் ஆரோக்கிய நிலையை உயர்த்தி, ஆரோக்கிய சீனா என்ற கட்டுமானம் முக்கிய முன்னேற்றத்தைப் பெறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மருத்துவ சிகிச்சை சேவை நிலையைப் பன்முகங்களிலும் உயர்த்துவது, ஆரோக்கிய சீனா என்ற இலக்கை நனவாக்குவதற்கான முக்கிய கடமையாகும். சீர்திருத்தமானது, சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய லட்சியத்தின் வளர்ச்சிக்கான வலுவான இயக்காற்றலாகும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய துறையச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் திறமைசாலிகள் அணியை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார். தவிரவும், மனித குலத்தின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியப் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, இத்துறையில் முக்கிய அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, பல்வேறு நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
