பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதமர் மோடி; இந்தியா – ஆசியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பு

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளார்.

11 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஆசியான்’ கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ளது. இதையொட்டி பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸின் அழைப்பின் பேரில் மணிலா செல்லும் பிரதமர் மோடி, நாளை நடைபெறும் 23-ஆவது இந்தியா-ஆசியான் வருடாந்திர மாநாடு மற்றும் கிழக்காசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்தப் பயணத்தின்போது பிலிப்பைன்ஸ் அதிபரைச் சந்திக்கும் பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதனிடையே, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள க்வாட் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடும் மணிலாவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author