இராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும்:சீனா அழைப்பு

ஈரான் நிலைமை பற்றிய ஐ.நா. பாதுகாப்பவையின் அவசர கூட்டம் பிப்ரவரி 28ஆம் நாள் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபு சோங் இக்கூட்டத்தில் பேசுகையில், ஐ.நா. சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளை பல்வேறு தரப்புகளும் பின்பற்ற வேண்டிய நிலைப்பாட்டில் சீனா எப்போதும் இருக்கிறது. சர்வதேச உறவுகளில் ஆயுதங்களின் பயன்பாட்டை அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்தும் அச்சுறுத்தலை சீனா எதிர்ப்பதுடன் கண்டிக்கிறது என்று தெரிவித்தார்.

மோதலால் ஏற்பட்ட அப்பாவி மக்களின் உயிரிழப்பு பற்றி சீனா வேதனை அடைந்துள்ளது. பல்வேறு தரப்புகளும் சர்வதேச சட்டத்தைச் செயல்படுத்தி, அப்பாவி மக்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், பேச்சுவார்த்தை தான், முரண்பாடு மற்றும் கருத்து வேற்றுமையைத் தீர்ப்பதற்கான ஒரே வழியாகும். அமெரிக்கா-ஈரான் இடையே தூதாண்மை ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெறும் போது இராணுவ தாக்குதல் நிகழ்ந்தது அதிர்ச்சி தருகிறது.

குறிப்பிட்ட தரப்புகள் அரசியல் நல்லெண்ணத்தைக் காட்டி, கூடிய விரைவில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி, அரசியல் தீர்வு என்ற சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author