சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 27ஆம் நாள் முற்பகல், தியன்சின் மாநகரில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டு கோடைகால தாவோஸ் மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கெடுத்து சிறப்புரை நிகழ்த்தினார். உலகப் பொருளாதார மன்றத் தலைவர், மங்கோலிய தலைமையமைச்சர், நியூசிலாந்து தலைமையமைச்சர், வியட்நாம் தலைமையமைச்சர், உலக வர்த்தக அமைப்பின் பொதுச் செயலாலர் மற்றும் 90 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 1500 பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைப் பேணி மதித்து, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் கண்ணோட்டத்தில் நிலைநாட்டி, உலகளாவிய அறைகூவல்களை சமாளிக்க கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்று லீச்சியாங் தெரிவித்தார்.