சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்கின்ற, 2025ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை 10ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றது.
பல்வகை நிகழ்ச்சியின் தரம் மேம்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுக்கிடையிலான இணைப்பு சுமுகமாக இருந்தது. நிகழ்ச்சியின் எதார்த்தமான வெளிகாட்டல் நிலை, அரங்குகள் பற்றிய வடிவமைப்பு, தடையில்லாத ஒளிப்பரப்பு ஆகியவற்றின் புத்தாக்கம், புதிய அம்சங்களையும் உணர்ச்சியையும் பார்வையாளர்களுக்கு வழங்கும்.
காது கேளாத மற்றும் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு இந்நிகழ்ச்சி தடையில்லாமல், ஒளிப்பரப்பை வழங்கும். இவ்வாறு 4 கோடியே 50 இலட்சம் காது கேளாத மற்றும் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி நண்பர்கள் இதன் மூலம் இந்த கலை நிகழ்ச்சியை ரசித்து வசந்த விழாவைக் கொண்டாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.