கோலன் ஹைட்ஸ் கைப்பற்றப்பட்ட பிரதேசமாகும் என்று கருதிய ஐ.நா., சிரியாவின் பிரதேச ஒருமைப்பாடு மீதான எந்த வித மீறலுக்கும் எதிராக நிற்கிறது என்று, ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் 10ஆம் நாள் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
சிரியாவில் பல நூற்றுக்கணக்கான ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை அண்மையில் தாக்குதல் தொடுத்துள்ளது பற்றிய செய்திக்குப் பதிலளிக்கையில் அவர் கூறுகையில்
சிரியாவின் பிரதேச ஒருமைப்பாடு மீதான எந்த வித மீறலையும் எதிர்க்கும் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இத்தகைய தாக்குதல்களை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.
கோலன் ஹைட்ஸ், சிரியாவின் கைப்பற்றப்பட்ட பிரதேசமாகும் என்று ஐ.நா. தொடர்ந்து கருதுகிறது. இஸ்ரேல் படை இடையக மண்டலத்தைக் கைப்பற்றியது என்பது, படை விலகல் உடன்படிக்கை மீறலாகும் என்று டுஜாரிக் வலியுறுத்தினார்.