சீன-ஸ்வீடன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து

சீன-ஸ்வீடன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ஸ்வீடன் மன்னர் 16ஆவது கார்ல் குஸ்தாஃபூவும் 9 ஆம் நாள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், நவ சீனாவுடன் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட முதலாவது தொகுதி ஐரோப்ப நாடுகளில் ஸ்வீடனும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  கடந்த 75 ஆண்டுகளில், இரு தரப்புறவு நிதானமாக வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இரு நாடுகளின் பொருளாதாரம். வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம், கல்வி முதலிய துறைகள் சார்ந்த  ஒத்துழைப்புகள் விரிவாகி சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு தரப்புறவில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் கூறியுள்ள ஷிச்சின்பிங், 75ஆவது ஆண்டு நிறைவை புதிய துவக்கப் புள்ளியாகக் கொண்டு, மன்னருடன் இணைந்து பாடுபட்டு, உலகின் அமைதி மற்றும் செழுமைக்கு மேலும் சிறப்பாகப் பங்காற்றவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்புகளின் நெருக்கமான ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து ஆழமாக்கி, இரு தரப்புகளின் நட்பார்ந்த உறவைத் தொடர்ந்து வளர்க்க விரும்புவதாக மன்னர் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author