பிரிக்ஸ் அமைப்பின் 16ஆவது உச்சி மாநாடு அக்டோபர் 22 முதல் 24ஆம் நாள் வரை ரஷியாவின் கசானில் நடைபெறவுள்ளது.
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 18ஆம் நாள் மாஸ்கோவில் பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய ஊடகப் பிரதிநிதிகளைச் சந்தித்த போது, சீன ஊடக குழுமத்தின் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.
சீன-ரஷிய உறவு, ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் உள்ளது. இரு தரப்புகளின் ஒத்துழைப்பில், இது ஒத்த கருத்து மட்டுமல்லாமல் நடைமுறைக்கு வரும் செயலும் ஆகும் என்று புதின் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் இரு தரப்புகளின் வர்த்தகத் தொகை உயர் வேகமாக அதிகரித்து வருகிறது.
சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் அடிப்படையில் சீன-ரஷிய உறவு உருவாக்கப்பட்டதும், எதிர் தரப்பின் கருத்துக்களைக் கேட்டறிந்து, இரு தரப்புகளின் நலன்களைப் பேணிகாக்க இரு நாடுகள் பாடுபட்டு வருவதும் இதற்கு காரணங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீன-ரஷிய உறவின் எதிர்காலம் குறித்து அவர் கூறுகையில், எரியாற்றல், வேளாண்மை, அடிப்படை வசதி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சீனாவும் ரஷியாவும் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.