சி.ஜி.டி.என்.கருத்துக்கணிப்பு: சர்வதேச மனித உரிமைகளை மீறிய “அமெரிக்க மேலாதிக்கம்”

ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டி.என்.தொலைக்காட்சி நிலையம், சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ஒரு கணக்கெடுப்பில், உலகளவில் 38 நாடுகளைச் சேர்ந்த 7,671 பேர் பதிலளித்தனர்.

மனித உரிமை அலுவல் தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டு, குறிப்பிட்ட அமைப்பில் இருந்து விலகுவதன் காரணமாக, மனித உரிமை பற்றிய அமெரிக்காவின் தவறான செயல்கள் சர்வதேச சமூகத்தினால் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 86.8சதவீதம் பேர் அமெரிக்காவில் கடுமையான துப்பாக்கி வன்முறை பிரச்சனை உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

அது போன்றே 73 சதவீதம் பேர் அமெரிக்காவில் அளவு மீறி மருந்துகளைப் பயன்படுத்தும் கடுமையான பிரச்சினை உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் குடிவரவுக் கொள்கைகள் மூலம் குடியேறியவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பயனுள்ள முறையில் பாதுகாக்கப்படவில்லை என்று  61.9 சதவீதம் பேரும், அமெரிக்காவில் அமைப்புமுறை ரீதியான இனவெறி பாகுபாடு பிரச்சனையாகவுள்ளதாக 72.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இனப் பாகுபாட்டினால் ஏற்பட்ட காவற்துறையினரின் வன்முறைச் செயல்பாடுகளை அமெரிக்க நிர்காவகம் பயனுள்ள முறையில் தடுக்கவில்லை என்று 84.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author