திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

நாகை மாவட்டம், காடம்பாடியில், திரெளபதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

காடம்பாடியில் உள்ள பழைமையான திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 24ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேகம் விழா தொடங்கியது.

நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், 4ஆம் நாள் நிகழ்ச்சியில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

You May Also Like

More From Author