தேவா மறைவுக்கு நடிகை ராதிகா உருக்கம்..!

Estimated read time 1 min read

‘தேனிசைத் தென்றல்’ என்று அழைக்கப்படும் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தேவா

, மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் தங்களது ஆழமான இரங்கலை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்

நடிகை ராதிகா மற்றும் அவரது கணவரும் நடிகருமான சரத்குமார் ஆகிய இருவரும் நேரில் சென்று மலர்மாலை அணிவித்து தேவாவின் உடலுக்குக் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர்.

இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் நெகிழ்ச்சியான இரங்கலைப் பகிர்ந்துள்ளார். “இசை உலகில் மிகச்சிறந்த சகாப்தத்தை உருவாக்கியவர்; திரையுலகில் மிகவும் எளிமையான, அபூர்வமான மனிதர். இரண்டு வாரங்களுக்கு முன்பு லண்டனில் அவருடன் நான் எடுத்த புகைப்படம்தான் அவருடனான கடைசிப் புகைப்படமாக இருக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” எனக் குறிப்பிட்ட அவர், தேவாவின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author