இந்தியா-ரஷ்யா வரலாற்று ராணுவ ஒப்பந்தம் அமல்: படைகளை நிலைநிறுத்த அனுமதி  

Estimated read time 1 min read

இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தமான ரெலோஸ் (Reciprocal Exchange of Logistics Support – RELOS) தற்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம், போர்ச் சூழல்களிலும் கூட இரு நாடுகளும் தங்களது படைகள், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை ஒன்றையொன்று தங்களின் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த அனுமதி அளிக்கிறது.
இந்தியா இதுவரை எந்தவொரு வெளிநாட்டுடனும் செய்துகொள்ளாத வகையில், மிகவும் ஆழமான ராணுவ ஒத்துழைப்பை வழங்கும் இந்த ஒப்பந்தம், தற்போது சர்வதேச அரசியல் களத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பாக, அமெரிக்கா பாகிஸ்தானுடனான உறவை வலுப்படுத்தி வரும் சூழலில், இந்தியாவின் இந்த முடிவு மூலோபாய ரீதியாகப் பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author