“ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இப்போது போட்டியிடுகிறார். விரைவில் அங்கிருந்தும் பொது மக்களால் விரட்டப்படுவார்” என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங்,
“அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு ஓடிவிட்டார் என்றார். “இப்போது, ரேபரேலி தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி பொது மக்களால் விரட்டப்படுவார்” என குறிப்பிட்டார்.