அனைத்து நாடுகளின் பொது நலன்களின் கண்ணோட்டத்தில் சீனா முன்வைத்த முன்மொழிவுகள்

அனைத்து நாடுகளின் பொது நலன்களின் கண்ணோட்டத்தில் சீனா முன்வைத்த முன்மொழிவுகள்

உக்ரைன் நெருக்கடியின் தொடர்ச்சி மற்றும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் பின்னணியில், 60ஆவது மியுனிச் பாதுகாப்புக் கூட்டம் பிப்ரவரி 18ஆம் நாள் நிறைவடைந்தது.

உலகளாவிய அறைகூவல்களை எவ்வாறு சமாளிப்பது? கொந்தளிப்பான உலகில் நிதானமான சக்தியைச் சீனா உறுதியாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் நிகழ்த்திய முக்கிய உரையில் வலியுறுத்தினார். இதைப் பல தரப்புகளும் வரவேற்கின்றன.

கடந்த பல ஆண்டுகளில், உறுதியற்ற மற்றும் நிதானமற்ற உலகத்தை எதிர்கொண்டு, அனைத்து நாடுகளின் பொது நலன்களின் கண்ணோட்டத்தில் சீனா எப்போதும் ஊன்றி நின்று தொடர்ச்சியான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.

இதன் விளைவாக, அண்மையில் நடைபெற்ற மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் “சீனா சிறப்பு நிகழ்ச்சி” மிகவும் பிரபலமாக இருந்தது. இக்கூட்டத்தில் வாங் யீ கூறுகையில், பெரிய நாடுகளின் ஒத்துழைப்பை முன்னேற்றும் நிதானமான சக்தியாக சீனா இருக்க வேண்டும்.

சூடான பிரச்சினைகளைச் சமாளிக்கும் நிதான சக்தியாக சீனா இருக்க வேண்டும். உலகக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நிதானமான சக்தியாக இருக்க வேண்டும். உலக அதிகரிப்பை மேம்படுத்தும் நிதானமான சக்தியாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.


சீனாவின் ஆக்கப்பூர்வமான இணக்க முயற்சியில், 2023ஆம் ஆண்டில் சௌதி அரேபியாவும் ஈரானும் வரலாற்று ரீதியான நல்லிணக்கத்தை நனவாக்கியுள்ளன. காலநிலை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, சீனாவின் முயற்சியுடன் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் “ஐக்கிய அரபு அமீரகம் ஒத்த கருத்துக்கள்” எட்டப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவின் அறைகூவல்களை எதிர்கொண்டு, ஐ.நா.வின் கட்டுக்கோப்புக்குள் சர்வதேசச் செயற்கை நுண்ணறிவு கட்டுபாட்டு நிறுவனம் நிறுவதைச் சீனா ஆதரிக்கின்றது. சர்வதேசச் சமூகத்தின் பொது நலன்களின் அடிப்படையில், உலக அறைகூவல்களை எவ்வாறு கூட்டாக எதிர்கொண்டு, பல நடவடிக்கைகளையும் திட்டங்களையும் சீனா மேற்கொண்டுள்ளது என்பதை அவை காட்டுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author