யின் யுஜென் உள்ளிட்ட 3 சீனப் பெண்மணிகள் FAOஇன் 100 முன்னோடி நாயகிகளில் ஒருவராகத் தேர்வு

Estimated read time 1 min read

யின் யுஜென் உள்ளிட்ட 3 சீனப் பெண்மணிகள் FAOஇன் 100 முன்னோடி நாயகிகளில் ஒருவராகத் தேர்வு

சீனாவின் பாலைவனமயமாதல் தடுப்பாளரும், தேசிய முன்மாதிரி தொழிலாளருமான யின் யுஜென் அவர்கள் ஐ.நா உலக உணவு மற்று வேளாண்மை அமைப்பின் (FAO) வேளாண்மை, உணவு மற்றும் கிராம வளர்ச்சித் துறைக்கான 100 முன்னோடி நாயகிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இவ்வமைப்பு 15ஆம் நாள் இத்தாலியின் ரோம் நகரில் அறிவித்துள்ளது. தவிரவும், சீனப் பாரம்பரிய சிகிச்சை நிபுணர் யூ ஜின்சியு, ஃபெங்ருய் விவசாய இயந்திரக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டோங் மின்ஃபாங் ஆகிய சீனப் பெண்மணிகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 15ஆம் நாள் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இவ்வமைப்பின் தலைமை இயக்குநர் ஜியு துங்யு கூறுகையில், மகளிர்கள் வேளாண்மை மற்றும் தானிய அமைப்பு முறையின் முக்கிய உந்து சக்தியாக விளங்குகின்றனர். உணவுப் பாதுகாப்பின் உத்தரவாதம், இயற்கை வளத்தின் நிர்வாகம், கிராம வளர்ச்சி முன்னேற்றம் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் இன்றியமையாத பங்களிப்பை ஆற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

 

Please follow and like us:

You May Also Like

More From Author