சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஆகஸ்டு 20ஆம் நாள், ஷிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சிக் கமிட்டி மற்றும் அரசின் பணியறிக்கையைக் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், புதிய யுகத்தில் ஷிட்சாங் மேலாண்மைக்கான கட்சியின் திட்டத்தை ஷிட்சாங் பன்முகங்களிலும் செயல்படுத்தி, புதிய வளர்ச்சிக் கருத்தை நடைமுறைப்படுத்தி, உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, நிதானம், வளர்ச்சி, உயிரின சுற்றுச்சூழல், எல்லை பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளை வலுப்படுத்தி, ஒற்றுமை, செழிப்பு, நாகரிகம், இணக்கம், அழகு ஆகியவற்றைக் கொண்ட புதிய ஷிட்சாங்கை கட்டியமைக்க வேண்டும் என்றார்.
மேலும், ஷிட்சாங்கில் அரசியல், சமூகம், தேசிய இனங்கள், மதம் ஆகிய துறைகளின் நிலைத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும். தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான முன்மாதிரி பிரதேசத்தை உருவாக்கி, பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான பரிமாற்றத்தை முன்னேற்ற வேண்டும். நடைமுறைக்கிணங்க உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, பீடபூமியிலுள்ள தனிச்சிறப்புடைய தொழில்களை வளர்க்க வேண்டும். உயிரின நாகரிக கட்டுமானத்தை விரைவுபடுத்தி, வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், சமூகக் காப்புறுதி உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.