வெனிசுலா மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனா கண்டனம்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீச்சியென் 5ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறுகையில்,

அமெரிக்கா இராணுவ படையினரை அனுப்பி, வெனிசுலா அரசுத் தலைவர் மதுரோ மற்றும் மனைவியை சிறைபிடித்து நாடு கடத்தியுள்ளது. அமெரிக்காவின் இச்செயலுக்கு, சீனா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் இச்செயல், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுக்கான அடிப்படை கோட்பாடுகளை மீறியதாகும். தவிரவும். ஐ.நா சாசனத்தின் கோட்பாடு மற்றும் கொள்கைக்கு புறம்பானது. வெனிசுலா ஆட்சியை கவிழ்க்கும் சூழ்ச்சியை நிறுத்தி, பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையை தீர்க்குமாறும் சீனா வலியுறுத்தியுள்ளது என்றார்.

வெனிசுலா அரசுரிமையின் சுதந்திரத்திற்கு சீனா மதிப்பளிக்கிறது. அந்நாட்டின் அரசு சொந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் சட்டங்களின் படியே உள் விவகாரங்களை சரியாக கையாளலாம். சீனாவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, இறையாண்மை வாய்ந்த நாடுகளின் ஒத்துழைப்பாக விளங்கி, சர்வதேச சட்டம் மற்றும் இரு நாடுகளின் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்படுகின்றது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author