2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பாதியளவான போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் செய்திஊடகம் மற்றும் நிறுவனங்கள், பிற நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்துகளை எடுப்பது குறித்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், இவை, சொந்த நாட்டின் விளையாட்டு வீரர்களின் இத்தகைய செயல்களைக் கண்டும் காணாமல் இருப்பது போல் நடந்து கொள்கின்றன. இச்செயல்களின் மூலம் விளையாட்டுப் போட்டியை அரசியல்மயமாக்குதல் மற்றும் ஆயுதமயமாக்கத்தை இவை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையில், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 2011ஆம் ஆண்டு முதல், ஊக்கமருந்துகளை எடுத்துக் கொண்டதன் காரணமாக 3 வழக்குகளில் சிக்கியுள்ள வீரர்களுக்கு அமெரிக்காவின் ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு தடை விதிக்கவில்லை. மேலும், விளையாட்டுப் போட்டியில் இத்தகைய வீரர்கள் கலந்துகொள்ள அமெரிக்காவின் ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு அனுமதியும் அளித்துள்ளது. விளையாட்டுப் போட்டிக்கான ஒருமைப்பாட்டை உத்தரவாதம் செய்யும் விதிகளுக்குப் புறம்பாக அமெரிக்காவின் இச்செயல்கள் அமைந்துள்ளன.
ஒலிம்பிக் எழுச்சி, அமெரிக்காவின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட முடியாது. ஊக்கமருந்து எதிர்ப்புப் பணி, பிற நாடுகளின் மீது பழி சுமத்துவதற்கான கருவியாக மாறப்போவதில்லை. சொந்தப் பிரச்சினைகளை அமெரிக்கா நேரடியாக எதிர்நோக்க வேண்டும். பெருமளவில் ஊக்கமருந்துகளை எடுப்பது குறித்து உலகத்திற்குப் பதில் அளிப்பதோடு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குரிய தூய்மையான, பாதுகாப்பான சூழலையும் உருவாக்கித் தர வேண்டும்.