சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யி அக்டோபர் 23ஆம் நாள், 2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 21ஆம் நாள் தெரிவித்துள்ளது. இதில் அவர் உலக ஆட்சிமுறை முன்மொழிவை செயல்படுத்தி, மேலும் நியாயமான உலக ஆட்சிமுறையை உருவாக்குவதை முன்னேற்றுவதற்கான ஆலோசனைகளை முன்வைக்க உள்ளார். அதோடு, வெளிநாட்டு விருந்தினர் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
