நெஞ்சை பதறவைக்கும் விபத்து.. 15 பேரின் நிலை?

Estimated read time 1 min read

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர்காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியே தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள வேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மேல் பயங்கரமாக மோதியது. இதில், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் எனப் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author