உலக வளரச்சி முன்மொழிவின் 5ஆவது ஆண்டு நிறைவுக்கான உயர் நிலைக் கூட்டம் ஜூலை 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இதில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலக வளர்ச்சி முன்மொழிவின் 5ஆவது ஆண்டு புதிய தொடக்கம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சியுடன் கூடிய அருமையான எதிர்காலத்தைக் கட்டியமைப்பது எனும் தலைப்பில் இக்கூட்டம் நடைபெறும். இதில் ஐ.நா உயர் நிலை அதிகாரிகள், உலக வளர்ச்சி முன்மொழிவின் கூட்டாளிக் குழுவைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் சீனாவுக்கான தூதர்கள் உள்பட்ட சீனா மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் பலர் இதில் பங்கேற்கவுள்ளர். உலக வளர்ச்சி முன்மொழிவின் நடைமுறையாக்க சாதனைகள், முக்கிய ஒத்துழைப்புகள் மற்றும் உலகத்துக்கான பங்களிப்பு குறித்து அவர்கள் ஆழமான கருத்துரையாட உள்ளனர்.
