ராணுவமயமாக்கத்தை மீண்டும் நனவாக்க விரும்பும் ஜப்பான்

இற்றியம் என்ற அரு மண்ணிலுள்ள உலோகத்தின் கையிருப்பு அடுத்த சில திங்களில் தீர்த்து போக உள்ளது. தொடர்புடைய ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில், சீனாவை வற்புறுத்த அமெரிக்காவின் உதவியை ஜப்பான் நாடியுள்ளது.

21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில்,

சீனா தொடர்புடைய சட்டம் மற்றும் விதிகளைப் பின்பற்றி, ஜப்பானின் மீது ஏற்றுமதி கட்டுபாட்டு நடவடிக்கை மேற்கொண்டது. ஜப்பான் ராணுவமயமாக்கத்தை மீண்டும் நனவாக்குவதையும் அணு ஆயுதங்களைக் கொள்வதையும் தடுப்பது இதன் நோக்கமாகும். சீனா, முக்கிய கனிமத்தின் உலக வினியோகத்தைப் பேணிக்காக்கும் நிலைப்பாடு மாறவில்லை. தொடர்புடைய தரப்புகள் இதற்கு பங்காற்ற வேண்டும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author