‘ஜன நாயகன்’ பட தணிக்கை அப்டேட்: ஜூன் 19-ல் சென்சார் சான்றிதழ் கிடைக்குமா?  

Estimated read time 1 min read

தளபதி விஜய் திரையுலகில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்த அவரது கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’, தொடங்கியதில் இருந்தே பல்வேறு கடுமையான சோதனைகளை சந்தித்து வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம், எதிர்பாராத நீதிமன்ற வழக்குகள், மறு தணிக்கை சிக்கல்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களால் முடக்கப்பட்டு, இறுதியில் இணையதளத்தில் முழுமையாக லீக் ஆனது படக்குழுவினரைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், வரும் ஜூன் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை படத்திற்குப் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிடும் எனத் திரைத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author