நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், இணைய வழி மோசடிகள் மற்றும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களைத் முழுமையாகத் தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் செல்போன்களில் சிம் கார்டுகளை அகற்றிவிட்டு, வெறும் வைஃபை வசதியை மட்டும் பயன்படுத்தி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதள மற்றும் தகவல் பரிமாற்றச் செயலிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.
தற்காலத்தில் பலரும் தங்களது தொலைபேசிகளில் இருந்து சிம் கார்டுகளை நீக்கிவிட்டு, பொதுமடங்கள் அல்லது வைஃபை இணைப்புகள் மூலமாக மட்டுமே இதுபோன்ற ஆப்களைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருவது சைபர் கிரேக்க காவல்துறையினரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையிலும் மத்திய தொலைத்தொடர்புத்துறை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது
இதுபோன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையிலும் மத்திய தொலைத்தொடர்புத்துறை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட அந்தத் தேதியிலிருந்து பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் சிம் கார்டு இல்லாமல் மேற்கண்ட செயலிகளை இயக்க முடியாது என்பதால், ஆப்ஸ் இயங்குவதற்குச் செல்போனில் சிம் கார்டு கட்டாயம் இருப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவானது தொழில்நுட்ப உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பொதுமக்களிடையே அதிக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.
