ஆந்திர சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடு-பவன் கல்யாண்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
காலை முதலே, சந்திரபாபு தலைமையிலான கூட்டணி, 109 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
இதன் தோழமை கட்சிகளான பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வரும் ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி
