நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3-வது வரிசையில் களமிறங்கிச் சொதப்பிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, அணி நிர்வாகம் எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் அவரைத் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு 3-வது இடத்தில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் திணறினார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா, வைபவ் போன்ற இளம் திறமை மீது எவ்விதத் தேவையற்ற அழுத்தத்தையும் திணிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார். வைபவ் அணியில் சேர்க்கப்பட்டதிலிருந்து வலைப்பயிற்சியில் மட்டுமே பேட்டிங் செய்து வருகிறார், எனவே அவர் தனது பழைய ஃபார்மை மீட்டெடுப்பார்.
மேலும், வைபவிற்குக் கடுமையான சூழல்களில் திடீரெனப் புதிய இடத்தைக் கொடுப்பதை விட்டுவிட்டு, அவருக்கு மிகவும் பரிச்சயமான ஓப்பனிங் (Opening) இறக்க வேண்டும் என்று சோப்ரா ஐடியா கொடுத்துள்ளார். அணி நிர்வாகம் இந்த இளம் வீரரின் திறமையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
