“கையில 2000 ரூபாய் நோட்டு வச்சிருக்கீங்களா” தபால் மூலமாகவே மாத்திக்கலாம்னு ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு….!! 

Estimated read time 1 min read

கடந்த 2023-ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்திருந்த நிலையில், தற்போது வரை 98.47 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பொதுமக்கள் மத்தியில் இன்னும் ரூ.5,451 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படாமல் கையிருப்பில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை எளிதாக மாற்றிக் கொள்வதற்காகப் புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியாக்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின்படி, பழைய 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது தபால் (Post/Courier) மூலமாகவோ அனுப்பி வைத்து மாற்றிக் கொள்ளலாம். தபால் மூலம் அனுப்பப்படும் நோட்டுகள், உரிய பரிசீலனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு, அதற்கான சரியான தொகை சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் நேரடியாகவே வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பழைய 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற விரும்பும் பொதுமக்கள் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஜி சாலையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது தபால் மூலமாக நோட்டுகளை அனுப்பி வைக்கலாம் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கையிலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள இந்த அரிய வாய்ப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author